தருமபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறையில் ஆட்குறைப்பு போன்ற மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து விசிக மற்றும் சிபிஐ, சிபிஎம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று வியாழக்கிழமை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர்கள் பாண்டியன், சாக்கன் சர்மா, நகர செயலாளர் சீனிவாசன், மின்னல் சக்தி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிசுபாலன், முன்னாள் எம். எல். ஏ டெல்லி பாபு மற்றும் 200க்கும் மேற்பட்ட விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்று மோடி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.