தர்மபுரி: ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு - பயணிகள் அதிகரிப்பு

0பார்த்தது
கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக மழையின் அளவைப் பொறுத்து மாறி மாறி வந்துள்ளது. மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, நேற்று 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (பிப். 08) ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி