தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரற்று காணப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், நேற்று வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் 1500 கன அடியாக சரிந்துள்ளதாக மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி