தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக மாறி மாறி வந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. வியாழக்கிழமை (பிப். 19) காலை 10 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து, 700 கன அடியாக சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.