தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

3பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழையைப் பொறுத்து நீர்வரத்து மாறி மாறி காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (நவ. 24) காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 6500 கனஅடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி