தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து மாறுபட்டு வருகிறது. நேற்று 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (பிப். 4) புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.