தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக 3000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மார்ச். 01) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக சரிந்துள்ளது.