பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த சில தினங்களாக பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து மாறி வந்துள்ளது. இந்நிலையில், இன்று (நவம்பர் 20) வியாழக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, வினாடிக்கு 6500 கனஅடியாக நீர்வரத்து தொடர்ந்து 21வது நாளாக நீடித்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.