பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி சின்னாறு படுகையில் திங்கட்கிழமை அன்று, பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரும்பு தோட்டத்திற்கு செல்லும் மண் சாலை வழியாக சின்னாற்றிலிருந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கோடு பட்டியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இணக்கக் கட்டணமாக ரூ. 2 லட்சம் வசூலிக்கப்பட்டது.