தர்மபுரி அருகே, பென்னாகரம் கே. குள்ளாத்திரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருன்தாஸ் என்பவர், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குமாரசாமி பேட்டை ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயிலின் முன் அவர் தலை வைத்து படுத்தார். ரயிலின் சக்கரத்தில் தலை துண்டிக்கப்பட்டு அருன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.