தமிழக வெற்றிக் கழகத்தின் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் முன்னிலையில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று சனிக்கிழமை காலை திறப்பு விழா கண்டது. தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.