இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக தொடுத்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து சம்பத் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் ஆணையரை நியமித்ததில் எந்த தவறும் இல்லை என்றும், தோனி ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.