தோனியின் கடைசி ஆட்டம்.. இன்று ஓய்வு அறிவிக்க வாய்ப்பு

9103பார்த்தது
தோனியின் கடைசி ஆட்டம்.. இன்று ஓய்வு அறிவிக்க வாய்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே.18) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 63-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரசிகர்களின் கவனம் முழுவதும் எம்.எஸ்.தோனி மீதே உள்ளது. காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை விளையாடாத தோனி, சேப்பாக்கத்தின் கடைசி ஹோம் மேட்ச் என்பதால் இன்று களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்று தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.