காரைக்குடியில் தனக்கு வீடும், ஓட்டும் இல்லை என்ற கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். "ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டபோது அங்கு அவருக்கு வீடும், ஓட்டும் இருந்ததா? சொந்த ஊரில்தான் போட்டியிட வேண்டும் என்றால் உங்கள் தேசிய ஒருமைப்பாடு எங்கே போனது? இந்த பயமும் நடுக்கமும் உங்களுக்கு அப்படியே இருக்கட்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.