‘இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜுக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கு’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் இன்று (செப்.21) பேசிய அவர், “சிரஞ்சீவி, சிவாஜி, டி.ராஜேந்தருக்குலாம் வராத கூட்டமா விஜய்க்கு வந்திருக்கு?. நடிகர் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய்க்கு கூடும் ரசிகர்கள் கூட்டத்தை அவர் கொஞ்சம் பக்குவப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டத்தை பார்த்து அதிமுக தொண்டர்கள் பயப்படத் தேவையில்லை” என்றார்.