மீன் இனத்தை சார்ந்த கடல் குதிரைகள், கடலில் நீந்தும்போது வழக்கமான மீன்களை போல் அல்லாமல் செங்குத்தாகவே நீந்தும் விசித்திர பண்பை கொண்டுள்ளன. பெண் கடல் குதிரை இடும் முட்டைகளை தனது வயிற்று பையில் பெற்றுக்கொண்டு, ஆண் கடல் குதிரையே கர்ப்பத்தை சுமந்து குட்டிகளை பிரசவிப்பது இதன் மிக முக்கிய அம்சமாகும். மேலும், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் வேட்டையாடவும் தங்களது உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அபாரத் திறனை இவை பெற்றுள்ளன.