நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் 59 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. த.வெ.க. 34.02% வாக்குகளும், தி.மு.க. (59 இடங்கள்) 24.19% வாக்குகளும், அ.தி.மு.க. (47 இடங்கள்) 21.21% வாக்குகளும் பெற்றன. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட இரு திராவிடக் கட்சிகளுக்கும் மிகக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதால், சுமார் 1.65 கோடி சொந்தத் தொண்டர்களே தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சியில் இரு கட்சிகளின் தலைமைகளும் உறைந்துள்ளன.