டிஜிட்டல் மோசடி: ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் ரிசர்வ் வங்கி திட்டம்

590பார்த்தது
டிஜிட்டல் மோசடி: ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் ரிசர்வ் வங்கி திட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், இணைய மோசடிகளும் பெருகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இழக்கும் பணத்தை திரும்பப் பெறுவது சவாலாக உள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் மக்களுக்கு வங்கி மூலமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் கீழ், மொத்த இழப்புத் தொகையில் 85% வரை வழங்கப்படும், ஆனால் அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி