
கேரளத்தில் கனமழை: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
கேரளத்தில் திருவோண பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் மழையால் நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




























