அதிமுக கட்சி மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திடீரென தொண்டர் ஒருவரை ஒருமையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர் ஒரு பெண்ணை பார்த்து 'ஏம்மா, நாங்க எதுக்கு இங்க நிக்கிறோம்' என கத்தினார். பின்னர் தொண்டர் ஒருவரை பார்த்து 'மடையா மடையா, பேசுவதை கேளு, பாதிபாதியாக கேட்டா எப்படி புரியும்' என கோபத்தில் கத்தினார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.