கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

687பார்த்தது
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட S.P. பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில், நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாநகர், தைலக்காடு பகுதியில், குமரன் திருநகரைச் சேர்ந்த ராஜ்குமார் (38), மேற்கு மரியனாதபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (எ) குருவிசரவணன் (42), செல்லமந்தாடியைச் சேர்ந்த மதன்குமார் (28) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you