பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 3 வாலிபர்கள் கைது

6பார்த்தது
பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டிய 3 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே வழிப்பறி செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறி 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அழகுசமுத்திரப்பட்டியை சேர்ந்த லோகேஷ்(21), காளிராஜ்(19), பிரதீப்(23) ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்ததை அடுத்து, மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி