3000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமனிதன் கற்திட்டைகள் ஆய்வு

4பார்த்தது
3000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமனிதன் கற்திட்டைகள் ஆய்வு
திண்டுக்கல், பண்ணைக்காட்டில் உள்ள எதிரொலி பாறை அருகே சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் அமைந்துள்ளன. உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, இன்று தொல்லியல் துறை சார்பில் மாணவ மாணவிகள் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்திய தொல்லியல்துறையின் திருச்சி துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் கூறுகையில், இங்குள்ள கற்திட்டைகள் தஞ்சை பெரிய கோவிலை விட 1000 ஆண்டுகள் பழமையானவை என்றும், அக்காலத்திலேயே கட்டிட கலைக்கு முன் உதாரணமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி