திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், நள்ளிரவில் வீட்டில் வளர்க்கும் கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த சார்லி ஜோசப் மற்றும் அவரது மனைவி மேரி, கோழிகளைத் தாக்க வந்த நல்ல பாம்பை அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடித்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் அந்தப் பாம்பை ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.