ஆத்தூர்: நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி மனு

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளமடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் 20 குடும்பங்களாக நிலங்களை வைத்து விவசாயம் செய்தும் மாடு ஆடுகளை வைத்து வளர்க்கும் வாழ்வியல் நடத்தி வருகின்றனர். சோத்தான நாயக்கன் கோம்பை அணைக்கட்டிலிருந்து நீர்வழி ஓடை ஒன்று தங்களது நிலங்களின் வழியாக சென்று மாங்கரை ஆற்றில் கலக்கிறது. மேற்படி நீர்வழி ஓடையை பளபளப்பும் செல்வாக்கும் மிக்க கரிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த முத்துவேல் மகன் இளமாறன் ஆகியோர் தவறாக அளந்து ஆக்கிரமிப்பு செய்து நேர்வழி ஓடையின் அருகில் அமைந்துள்ள அவர்களுடைய நிலங்களுக்கு சாலை போட முயற்சிக்கின்றனர். 

மேற்படி ஓடை மாங்கரை ஆற்றில் சேரும் இடத்திற்கு மேல்புறம் ஒரு தடுப்பணையும் அதற்கு மேல் பொருத்தமான இடத்தில் ஒரு தடுப்பணையும் கட்டி நீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பணிகளுக்கும் மாடுகளுக்கும் பேரளவு உதவியாக இருக்கும். எனவே நீர்வழி ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்ட தக்க நடவடிக்கை எடுத்து தங்களது விவசாய நிலத்தை பாதுகாத்து தரவேண்டும். நீர்வழி ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தங்கள் நிலத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி