திண்டுக்கலில் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

402பார்த்தது
திண்டுக்கலில் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்த முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. உஷா, ஆசிரியர்கள் மற்றும் ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வி. ர. கீர்த்தனா மணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் பொதுத்தேர்வுகளை சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.