திண்டுக்கல்: மலைக்கோட்டை அருகே உள்ள சனீஸ்வரன் கோவிலில் இன்று (மே 31) வைகாசி வளர்பிறையை முன்னிட்டு முக்கால பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆடி மாதமும் ஐந்து கால பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்று வைகாசி சனிக்கிழமை சிறப்பு பூஜையாக முக்கால பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூலவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.