சித்தையன்கோட்டை கடைவீதி திடலில் நடைபெற்ற நாதக கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ஊரக வளர்ச்சி துறை அமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி, திமுக நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியினரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செம்பட்டி காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இருதரப்பினரையும் கலைத்து சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.