திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை (ஜனவரி 12) முதல் நுழைவுக் கட்டணம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வசூலிக்கப்படும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இனி நேரிடையாக பணம் வசூலிக்கப்படாது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.