திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவூர் அணை, நீலமலைக்கோட்டை குளம், தாமரைக்குளம், ரெங்கசமுத்திரக்குளம், ஆயக்குடி குளம் உள்ளிட்ட 16 குளங்கள் மற்றும் கண்மாய்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடி குத்தகைக்கு விடப்பட உள்ளன. இது குறித்த விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் கிடைக்கும் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.