திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையான நிலையில், இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். இதனால், சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்றது. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.