செம்பட்டி, நிலக்கோட்டை, மதுரை, வத்தலகுண்டு, தேனி, போடி, கொடைக்கானல், மற்றும் பழனி செல்லும் சாலைகளின் சந்திப்பாக உள்ள செம்பட்டியில், முகூர்த்த தினம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது.