திண்டுக்கல் மாவட்டம் சரளப்பட்டியில், இடப் பிரச்சனை காரணமாக மணிகண்டன் என்பவர், ராமசாமி பிள்ளை மகன் சண்முகவேல் மீது தண்ணீர் லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதில் சண்முகவேல் உயிர் தப்பினார். பின்னர் லாரியிலிருந்து இறங்கி வந்த மணிகண்டன், சண்முகவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.