திண்டுக்கல்: அரிவாளால் தாக்கி கொலை முயற்சி

75பார்த்தது
திண்டுக்கல்: அரிவாளால் தாக்கி கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோணம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு துரைப்பாண்டி என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி(46) மற்றும் பழனிகுமார் ஆகிய இருவரையும் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன், நீதிமன்ற முதல்நிலை காவலர் நாகலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் சீரிய முயற்சியால் திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் இரண்டாம் குற்றவாளியான பழனிகுமார் இறந்த நிலையில் முதல் குற்றவாளியான கணேசமூர்த்திக்கு 15 ஆண்டுகளுடன் கூடிய 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.11,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி