திண்டுக்கல்: சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை

573பார்த்தது
திண்டுக்கல்: சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தைகளால் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூரைச் சேர்ந்த நேருஜி மகன் பூமணி (24) என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோவிலிருந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வந்த நிலையில், மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் குற்றவாளி பூமணிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி