இந்திய தேர்தல் ஆணையத்தால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராவ், இன்று (11.02.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.