ஆத்தூர் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

974பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, நி. பஞ்சம்பட்டி ஊராட்சியில் உள்ள சேர்வாராயன் குளத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னாளப்பட்டி போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி