பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, கோலாகலமாக கொண்டாடி பெண்கள்

2பார்த்தது
பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, கோலாகலமாக கொண்டாடி பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 5000 பெற்றுக் கொண்ட பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கோலாகலமாக கொண்டாடினர். சிவஞானபுரம், குல்லிசெட்டிபட்டி, நூத்துலாபுரம், கோட்டூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி