திண்டுக்கல் பகுதியில் உள்ள அருள்மிகு பட்டாளம்மன் பகவதி அம்மன் திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் மதுரைவீரன் சாமியின் சிலையை கல்லை வைத்து சேதப்படுத்தியதாக வினோத் (18) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி விசாரணை மேற்கொண்டு, வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஊர் நாட்டாமை தண்டபாணி (48) அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.