
தமிழ்நாடு தலைசிறந்து விளங்கி வருவதாக அமைச்சர் பெருமிதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 11வது வகுப்பு பயிலும் 17 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி ஆத்தூர் தொகுதி சித்தையன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பங்கேற்று, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், காலை சிற்றுண்டி, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவர்கள் பயனடைவதாகவும் அவர் கூறினார். விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியால் தமிழக வீரர்கள் உலக அளவில் சிறந்து விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், ஆத்தூர் தொகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கடைகளுக்கு நவீன கைரேகை விற்பனை முனைய இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.




































