
மனிதநேய மக்கள் கட்சி 18 ஆம் ஆண்டு துவக்க விழா
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி தனது பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கியது. தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் 500 நபர்களுக்கு பிரட், பிஸ்கட், பழங்கள் அடங்கிய தொகுப்பை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஷேக் பரீத், செயலாளர் யாசர் அராஃபத் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




























