திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில், பெரிய கடை வீதியில் உள்ள வெடிமருந்து மற்றும் விவசாய மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வீரமணி & கோ, அனீஸ் துப்பாக்கி கடை மற்றும் நிகில் சிங் கடையிலிருந்து மொத்தம் 1500 கிலோ சல்பர், பொட்டாசியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், கறிமருந்து உள்ளிட்ட வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு அனுமதி இன்றி வெடிமருந்துகளை விற்பனை செய்ததாக தினேஷ்குமார் மற்றும் நிகில் சிங் ஆகிய இரு கடைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடை உரிமையாளர் வீரமணியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.