திண்டுக்கல் மாவட்டத்தில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2026–2027 கல்வியாண்டிற்கான LKG வகுப்பில் 25% இடஒதுக்கீட்டில் 174 தனியார் பள்ளிகளில் 1,828 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,416 பேர் விண்ணப்பித்த நிலையில், பல பள்ளிகளில் இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்ததால், குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.