திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, R. S. ரோடு மற்றும் திருவள்ளுவர் சாலை பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கொத்தபுளிப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (57) மற்றும் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணேசன் (52) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 60 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.