திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினர், பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் மற்றும் AMC-ரோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சின்னச்சாமி (38) மற்றும் முருகன் (46) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.