திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் செல்போன் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருடப்பட்டது. இது தொடர்பாக நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி, கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் சாணார்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.