திண்டுக்கல்லில், ராமசாமி என்பவர் பாறைப்பட்டி அகஸ்தியர் தெப்பம் அருகே நடந்து சென்றபோது, முத்தழகுபட்டியை சேர்ந்த அந்தோணி டேமியன் மற்றும் பெரிய பள்ளப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகியோர் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.