திண்டுக்கல்லில், மணிமாறன் என்பவர் மீது பீர்பாட்டிலை கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக தாஜ்தீன் மற்றும் ஆண்டவர் (எ) பெருமாள் மீது புகார் அளிக்கப்பட்டதன்பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தாஜ்தீன் மற்றும் ஆண்டவர் (எ) பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.