திண்டுக்கல்லில், கூலித் தொழிலாளி தீபக் என்பவர் மீது உடைந்த பீர் பாட்டிலை கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்த ரூ. 500 பணத்தைப் பறித்துச் சென்றதாக வெங்கடேசன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.