தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் நகர் பகுதியில் நடைபெற்ற தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட எஸ்பி. பிரதீப் உத்தரவின் பேரில், நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படையினர் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சர்க்கரை முகமது (23) மற்றும் கார்த்திகேயன் (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
